skvSchool
 • img
 • img
 • img
 • img
 • img
 • img
 • img
 • img
 • img
 • img

ஸ்ரீ கிருஷ்ணம்மாள் வித்யா சாலை மான்ய நடுநிலை பள்ளி.


து. ரெங்கநாதபுரம்.

பள்ளியை பற்றி சிறு குறிப்பு

பள்ளியின் முதல் தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் ஆவார்.அதற்கு பின் அவருடைய சகோதரர் திரு.பஞ்சாட்சரம் அவர்கள் தலைமை ஆசிரியராக பொறுபேற்று இருந்தார்.

அவருக்கு பின் திரு.வீ .சுந்தராஜன் அவர்களும் அடுத்து 2009 வரை திரு .ந.திராவிடமணி அவர்களும் தலைமை ஆசிரியராய் பொறுப்பு வகுத்து தங்களின் பணியை சீரும் சிறப்புமாக செய்தனர்.

திரு .ந.திராவிடமணி அவர்கள் 2009 – ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதினை பெற்று இப்பளிக்கு மேலும் சிறப்பினை பெற்று தந்தார்.

2009 – ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக திருமதி .ஜெ .சுஜாதா அவர்கள் பதவியேற்று தம் பனியை சிறப்பாக செய்து கொண்டு இருகின்றார்.

தற்பொழுது 3 ஆண் ஆசிரியர்களும் 8 பெண் ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். 150 க்கும் மேற்பட்ட மாணவ மணிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளி வரலாறு

1941 – ல் கவிதாமணி டாக்டர் .அ.வெ.ர .கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி துவக்கப்பள்ளியாக தனது சேவையை தொடங்கி 1958 –ல் நடுநிலை பள்ளியாக உயர்ந்தது. தனது கல்வி சேவையை 75 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வந்து தனது பவள விழாவை கொண்டாடியது.

1941-ல் ஒரு திண்ணை பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி திரு .ஆதிமூலம் நாயுடு அவர்கள் வரைபட திட்டப்படி கட்டடம் கட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தாளாளரக திரு.அ.வெர.கிருஷ்ணசாமி ரெட்டியார் செயல்பட , 1974 –ல் திரு. திருமலை நாயுடு அவர்கள் 7 ஆண்டுகள் தாளாளராக பொறுப்பேற்று நடத்தினார் .

அதன் பின்னர் அ.வெ.ர .பிரசன்னம் அவர்கள் 10 ஆண்டுகள் 1992 வரை நிர்வாகியாக செயல்பட்டார்.அவருக்கு பின் 24 ஆண்டுகளாக தற்பொழுது வரை திரு . பி . கிருஷ்ணசாமி அவர்கள் நிர்வகித்து வருகின்றார்.

எங்கள் பள்ளியின் சிறப்பம்சங்கள்....

தொழில்நுட்பம்

இந்த கால தலைமுறைகளுக்கு ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பத்தையும் அதை பயன்படுத்தும் முறையையும் சிறந்த முறையில் கற்று தர படுகின்றது.

சிறந்த ஆசிரியர்கள்

எம்பள்ளியல் மிகவும் திறமை மற்றும் அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் இருகின்ற காரணத்தினால் பள்ளி மாணவர்கள் மேலும் அவர்களின் திறைமையும் அனுபவத்தையும் பெருக்கி கொள்ள ஏற்ற சூழ்நிலை நிலவுகின்றது.

செய்முறை பயிர்ச்சி

எம்பள்ளியல் கணினி, அறிவியல், கணிதம், இசை, யோகா, பாரதம் போன்ற அணைத்து விதமான வகுப்புகளுக்கும் சிறந்த முறையில் செய்முறை பயிர்ச்சி அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் அளிக்கப்பட்டு வருகின்றது.

உறுதுணை

எம்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்து மாணவர்களின் முனேற்றதிற்கு மிகவும் உதவியாக இருகின்றனர்.

பள்ளி நிறுவனர், செயலாளர் , தலைமை ஆசிரியர்

 • அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார்

  பள்ளி நிறுவனர்

  அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் 50 – வயதிற்கு மேல் சம்ஸ்கிருத மொழியை பயின்று நிறைய நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சௌந்தர்ய லஹரி – என்னும் சம்ஸ்கிருத நூலை “அழகு வெள்ளம் “ என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.அதன் கல்வெட்டு திருவானைக்கோவில் மற்றும் திருசெந்தூர் கோவில்களில் உள்ளன. இதற்காக தமிழக அரசு இவருக்கு கவிதாமணி பட்டம் வழங்கி சிறப்பித்தது .

 • பி.கிருஷ்ணசாமி M.A.,M.Phil.,B.Ed.,

  நிர்வாகி / செயலாளர்

  தன் சிறுவயதிலேயே தாளாளராக பொறுப்பேற்று பள்ளியின் பல்வேறு வகையான முன்னேற்றத்தில் முழு அக்கறையுடன் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றார்.

 • ஜெ.சுஜாதா M.A.,M.Sc,M.Phil.,B.Ed.,

  தலைமை ஆசிரியர்

  2009 - முதல் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றாலும் 1997 - ல் பள்ளியின் ஆசிரியராக பொறுப்பேற்றது முதலே பள்ளியில் ஆண்டு விழா முதல் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக செயலாற்றி வருகின்றார்.

ஆசிரியர்கள் / ஆசிரியைகள்